சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் அரசியல் களத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்தவகையில், அமமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கு இன்று முதல் விருப்ப மனு விநியோகம்செய்யப்பட்டுவருகிறது. சென்னை அசோக் நகரில் உள்ள அமமுக அலுவலகத்தில் இன்று (03.03.2021) முதல் 10ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட விரும்புவோர்கள் அமமுக அலுவலகத்திற்கு விருப்ப மனு வாங்க குவிந்துள்ளனர்.

Advertisment