இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக 18வது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (04-06-24) எண்ணப்பட்டு வரும் நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில், பா.ஜ.க கூட்டணி 295 இடங்களிலும், இந்தியா கூட்டணி 231 இடங்களிலும், மற்ற கட்சிகள் 17 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

Advertisment

தமிழகத்தில் 39 தொகுதிகளில் 39 இடங்களில் திமுக கூட்டணியும், பாஜக கூட்டணி ஒரு இடத்திலும், முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக கூட்டணி ஒரு இடத்திலும் கூடஇடம்பெறவில்லை. திமுக கூட்டணி அதிகப்படியான இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment