The voice of Pollachi women is still ringing in my ears

Advertisment

சட்டமன்றத் தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருக்கின்ற நிலையில், அனைத்து முக்கியத் தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த தேர்தலில் அமமுகவுடன் தேமுதிக, ஒவைசி மேலும் சில கட்சிகள் கூட்டணி வைத்துள்ளது. ஒருபக்கம் தேமுதிகவினர் தீவிரப் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், மறுபுறம் அமமுக கட்சியின் பொதுச் செயலாளர்டி.டி.வி. தினகரன் தீவிரத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதேபோல் நேற்று திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அமமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “உலகத்திலேயெ முட்டிப் போட்டு முதல்வர் ஆன பெருமை எடப்பாடி பழனிசாமியை மட்டுமே சாரும். உங்களுக்கு இந்தப் பதவியையும், கட்சியையும் பிச்சையாகப் போட்டவர் சசிகலா. அதிமுக தேர்தல் அறிக்கையில் மாதம் ரூபாய் 1,500 மற்றும் 6 சிலிண்டர் கொடுப்போம் எனச் சொல்கிறார்கள். ஆனால் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபாயும், புழுத்துப் போன ரேஷன் அரிசி 5 கிலோவும் கொடுத்தீங்க. பொள்ளாச்சியில் சூறையாடப்பட்ட பெண்களின் குரல் இன்றும் காதில் ஒலிக்கிறதே. இது தான் வெற்றி நடை போடும் தமிழகமா? என்று கூறினார்.