Advertisment

"போதி தர்மருக்கு சிலை அமைக்க வேண்டும் " -மோடிக்கு காங்கிரஸ் எம்பி விஷ்ணு பிரசாத் கோரிக்கை

காங்கிரஸ் செயல் தலைவரும், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் விஷ்ணு பிரசாத் சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

அப்போது அவர், "சீனா அதிபரும் இந்தியா பிரதமர் மோடியும் சென்னை அருகே உள்ள மாமல்லபிரத்தில் சந்திப்பது உலக நாடுகள் மத்தியில் உன்னிப்பாகப் பார்க்கப்படுகிறது.கி.பி.5 ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் பல்லவ வம்சத்தில் பிறந்தவர் போதி தர்மர்.

Advertisment

உழைப்பு, சுறுசுறுப்பு, விடாமுயற்சி போன்ற தத்துவங்களை சீனாவுக்கு போதித்தது போதி தர்மர். இந்த கருத்துக்களை பின்பற்றி தான் சீனா வளர்ந்து வருகிறது.

vishnu prasad mp - Narendra Modi

தமிழ்நாட்டில் இருந்து சென்றவர் சீனாவில் புகழ் பெற்றவர் போதி தர்மர். அவரை சீனர்கள் பின்பற்றி வருகிறார்கள். நமது பெருமையை நாம் உணர்ந்து வல்லபாய் படேலுக்கு குஜராத்தில் சிலை அமைத்தது போல போதி தர்மருக்கு காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் சிலை அமைக்க வேண்டும். போதி தர்மர் குறித்த ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்.தற்காப்பு கலையில் சிறந்தவர், அரிய மருத்துவத்தையும் கண்டுபிடித்த போதி தர்மரின் புகழை நாம் மறந்து விட்டோம். அவருக்கு மத்திய அரசு சிலை அமைக்க வேண்டிம் " என மோடிக்கு கோரிக்கை வைத்தார் டாக்டர் விஷ்ணுபிரசாத்.

தொடர்ந்து பேசிய அவர், " சீன அதிபர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மாமல்லபுரத்தை தேர்வு செய்து வருவதற்கான முக்கிய காரணம் வரலாற்றை தெரிந்து கொள்வதற்காகத்தான்.

போதி தர்மருக்கு தமிழகத்தில் சிலை நிறுவுவது தொடர்பாக நிச்சயமாக என்னுடைய குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே இதற்கான கடிதத்தையும் தயார் செய்து வைத்துள்ளேன். பிரதமரை நேரில் சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்.

சீனா பிரதமர் வருகைக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டியது இந்திய அரசின் கடமை. அதே நேரத்தில் மாமல்லபுரத்தில் உள்ள மீனவர்கள், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்பதையும் வலியுறுத்தினார்.

மேலும் பேசிய அவர், "நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் காங்கிரஸ் - திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது " என்றார்.

congress Narendra Modi Vishnu Prasad
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe