Advertisment

 மே.22ல் நடக்கும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் விசிக பங்கேற்கும் - திருமாவளவன்

vt

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

Advertisment

பின்னர் பத்திரிகையாளர்களுக்கு அவர் நேர்காணல் அளித்தார்.

அப்போது அவர், "மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்று திரண்டால் தான் மதவாத சக்திகளை அழிக்க முடியும், கார்நாடக தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் மற்றும் காங்கிரஸ் முன்னதாகவே கூட்டணி வைத்திருந்தால், பாஜக வலுப்பெற்று இருக்க முடியாது" என்று கூறினார்.

Advertisment

மேலும் " காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்தாமல் இருப்பதை பற்றி திமுக மற்றும் தோழமை கட்சிகளுடன் கலந்து பேசி அடுத்த கட்ட போராட்டம் எவ்வாறு கொண்டு செல்வது என்று மே 22 ஆம் தேதி அறிவாலயத்தில் கூடி பேச உள்ளோம் என்றும் கூறியவர், " ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி 22-ஆம் தேதி நடக்கும் கட்சி சார்பற்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொள்வோம் என்றும் கூறினார்.

Thirumavalavan viruthachalam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe