v

மக்கள் நீதி மய்யம் தொடங்கி அடுத்த கட்டப்பணிகளில் தீவரமாக களம் இறங்கியுள்ளார் கமல்ஹாசன். இந்நிலையில் விஷாலும் மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கியுள்ளார்.

Advertisment

நடிகர் சங்க தேர்தலில் விஷாலுக்கு ஆதரவாக இருந்து அவரை வெற்றி பெற வைத்தவர் கமல். அடுத்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் வெற்றி பெறவும் கமல் ஆதரவாக இருந்தார். இதன் பின்னர் ஆர்.கே.நகர் தேர்தல் என்று அடுத்தடுத்து அதிரடிகளை தந்துகொண்டே இருந்த விஷால், கமல் மக்கள் நீதி மய்யம் துவங்கியதும் சினிமாவில் தீவிரம் காட்டினார். இந்நிலையில் அரசியலில் தீவிரம் காட்டத்தொடங்கியுள்ளார் விஷால். மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கி கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இது அரசியல் கட்சிக்கான ஆரம்பம் என்றே கூறப்படுகிறது.

Advertisment

நடிகர் விஜய்மக்கள் இயக்கம் என்ற பெயரில் அமைப்பை தொடங்கி அந்த இயக்கம் செயல்பட்டு வரும் நிலையில், விஷால் மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் அமைப்பை தொடங்கியுள்ளார்.