சாத்தூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார் சீனிவாசன். அவர் இன்று சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6972022440" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அப்போது, திமுக எம்.எல்.ஏ.க்களும் மாவட்ட செயலாளர்களுமான கே.கே.எஸ்.எஸ்.ஆரும் தங்கம் தென்னரசுவும் உடன் இருந்தனர்.
விருதுநகர் மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி, விருதுநகர் மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரி சிவஞானத்திடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவரோடு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தேமுதிக மாவட்ட செயலாளர் செய்யது காஜாசெரீப் உள்ளிட்டோர் உடன் வந்தனர்.