Advertisment

சைக்கிளில் பாராளுமன்றம் சென்ற காங். எம்.பி.! காரணம்??

Virudhunagar congress mp

இந்த கரோனா காலக்கட்டத்தில், நாளுக்கு நாள், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தபடியே இருக்கிறது. பொதுமக்களை மிகவும் பாதிக்கின்ற பிரச்சனையாக இது உருவெடுத்துள்ளது. இதனைக் கண்டிக்கும் விதமாக, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், இன்றைய தினம் பாராளுமன்றத்துக்கு சைக்கிளிலேயே சென்றுள்ளார்.

Advertisment

பாராளுமன்ற கட்டிடத்தின் முன்பாக, மாணிக்கம் தாகூர் பேசிய வீடியோ பதிவில், “இன்றைய தினம் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, பாராளுமன்றத்திற்கு மிதிவண்டியில் வந்திருக்கிறேன். இந்த நாட்டினுடைய மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை மோடி அரசு குறைக்க வேண்டும். ஏழை மக்களிடம் அடிக்கின்ற கொள்ளையை தடுக்க வேண்டும் என்பதற்காக பாராளுமன்றத்திற்கு மிதிவண்டியில் வந்திருக்கிறேன்.” என்று கூறி, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

Bicycle congress mp issue Parliament petrol Diesel price
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe