Advertisment

பதிவான வாக்குகளில் வித்தியாசம்.... விராலிமலை வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்.!

Difference in registered votes .... Viralimalai vote counting stop

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அமைச்சர் விஜயபாஸ்கரும், திமுக வேட்பாளராக பழனியப்பனும் போட்டியிடுகின்றனர். இன்று (02.05.2021) காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே முதல் சுற்று எண்ணிக்கையின்போது ஒரு இயந்திரத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனால் பரபரப்பு ஏற்பட்டு வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு அதிகாரிகள் சமாதானம் செய்த நிலையில், மீண்டும் வாக்கு எண்ணிக்கை 2வது சுற்று எண்ணத் தொடங்கிய நிலையில், அதில் 4 பெட்டிகளில் உள்ள வாக்குகளுக்கும் இவிஎம் இயந்திரத்தில் உள்ள வாக்குப்பதிவையும் பார்க்கும்போது சுமார் 3,500 வாக்குகள் வித்தியாசம் ஏற்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று திமுகவினர் நிறுத்தி வைத்துள்ளனர்.

தொடர்ந்து இரண்டு சுற்றுகள் கூட முடிவடையாத நிலையில் ஒரு மணியைக் கடந்தும் வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திமுக வழக்கறிஞர்கள் இப்பொழுது வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருகை தர உள்ளனர்.மேலும்,திமுக கட்சித் தலைமை வரை மா.செ செல்லப்பாண்டியன் புகார் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் அதிகாரியிடமும் புகார் மனு கொடுத்துள்ளார்.

viralimalai tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe