ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல்வேறு இடங்களில் குறைந்தது 2 அடி முதல் 20 அடி வரைஉயரம் உள்ளவிநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். பின்னர் அந்தச் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும்.

Advertisment

இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக விநாயகர் சதுர்த்தி தினத்தன்று விநாயகர் சிலை ஊர்வலத்திற்குத் தடை உள்ளதால் உயரமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது. இதற்குப் பல்வேறு இந்து அமைப்புகளும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.

Advertisment

இந்த நிலையில் சென்னையில் இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு பொதுச்செயலாளர் பாரதமாதா பா.செந்தில் தலைமையில் விநாயகர் சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சிலையை தமிழகம் முழுவதும் வீதிகளில் பிரதிஷ்டை செய்து வழிபட அனுமதி வழங்கிடாத தமிழக அரசு டாஸ்மார்க் கடைகள் திறக்க அனுமதி வழங்கியிருப்பதைக் கண்டித்து, சென்னை கே.கே. நகர் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார்.