Advertisment

விநாயகர் சதுர்த்தி கொண்டாட முற்படும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி வழக்கு!

chennai high court

தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட முற்படும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

கரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து செல்லவும், அதனைக் கடலில் கரைக்கவும், தடை விதித்து தமிழக அரசு கடந்த 13- ம் தேதி உத்தரவிட்டது.

Advertisment

ஆனால்,தடையை மீறி தமிழகம் முழுவதும், ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட உள்ளதாக இந்து முன்னணியின்மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தடையை மீறி விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருவண்ணாமலையைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தடையை மீறி விநாயகர் சிலைகளை வைக்கும் இந்து முன்னணி அமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி அரசுக்கும், டிஜிபி-க்கும் மனு அளித்துள்ளதாகவும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமெனவும் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vinayagar chaturthi chennai high court
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe