விழுப்புரம், விக்கிரவாண்டியிலுள்ள வெட்டுக்காட்டில் தற்போது சாலைகள் போடப்பட்டு வருகின்றன.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6972022440" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
8 மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த வேலை பாதியில் நிறுத்தப்பட்டது. மீண்டும் 3 மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்டது, மீண்டும் இரண்டு வாரத்திற்கு முன்பு தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இன்று தொடங்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவித்தபின்பு எந்த விதமான திட்டங்களையும், அறிவிப்புகளையும் செயல்படுத்தக்கூடாது என்பது விதி. அந்த வகையில் இது தேர்தல் விதிகளை மீறும் செயலாகும்.
விக்கிரவாண்டியிலிருந்து பாண்டிச்சேரி செல்ல இந்த ஊர் வழியாகவும் ஒரு பாதை உள்ளது. இதில் அதிகமான வாகனங்கள் செல்வதும் குறிப்பிடத்தக்கது. அப்போதெல்லாம் போடப்படாத சாலை இப்போது வாக்குக்காகவிறுவிறுவென போடப்படுகிறது. மேலும், இங்கு அதிமுகவைச் சேர்ந்தவர்கள் ஒரு ஆளுக்கு 400 முதல் 500 வரை வாக்குக்கு பணம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.