o panneerselvam

Advertisment

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் 21.10.2019 அன்று நடைபெறவுள்ளது. அதிமுக கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை இந்தியர் விடுதலைக் கட்சியின் நிறுவனத் தலைவர் அ.வெ.சுதாகரபாண்டியன் நேரில் சந்தித்து அதிமுக வேட்பாளர்களுக்கு தங்கள் கட்சி ஆதரவு அளிக்கிறது என்று தெரிவித்தார்.

o panneerselvam

o panneerselvam

Advertisment

இதேபோல் பசும்பொன் முன்னணி கழகத்தின் நிறுவனத் தலைவர் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள், அகில இந்திய ஃபெடரல் பிளாக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ஆனந்தமுருகன் அவர்கள் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்தனர். அப்போது விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு தங்களது கட்சியின் முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தனர்.