இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக அமைச்சர்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவை அவர்களது இல்லத்தில் சந்தித்து பேசினர்.
இதையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான முத்தமிழ்ச் செல்வனை ஆதரித்து தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dmdk 88.jpg)
விஜயகாந்த்தும் பிரச்சாரத்திற்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று அதிமுக தலைமை, பிரேமலதா மற்றும் விஜயகாந்த்திடம் கேட்டுக்கொண்டது. இதேபோல் பாமகவும், போட்டி கடுமையாக இருப்பதால் தேமுதிகவை இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முழுமையாக களமிறங்க சொல்லுங்கள் என்று அதிமுக தலைமையிடம் வலியுறுத்தியது.
இந்தநிலையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் 19.10.2019 அன்று விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் என்று தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us