தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொதுமக்களைச்சந்திக்க இருப்பதாகக் கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒவ்வொரு ஆண்டும் புது வருடத் தொடக்கத்தின்போதும் தனது கட்சியினரையும் பொதுமக்களையும் சந்திப்பது வழக்கம். அதன்படி 2023 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வர உள்ளதாக தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் புத்தாண்டு தினத்தன்று காலை 11 முதல் பிற்பகல் 12 மணிவரை விஜயகாந்த் அலுவலகத்தில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.