2019 நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறுகிறது. கடந்த 11ம் தேதியன்று 91 தொகுதிகளில் முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் 38 மக்களவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. அதோடு சேர்த்து, காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதா மற்றும் மகன் விஜய பிரபாகரன் என குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
அதிமுக தலைமையிலான கூட்டணியில் விஜயகாந்த்தின் தேமுதிக இணைந்து போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு விருதுநகர், சென்னை வடக்கு, திருச்சி, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.