Advertisment

“மிகவும் மனவேதனை அடைந்தேன்.. அந்த மனித மிருகங்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்”... விஜயகாந்த் ஆவேசம்

vijayakanth

விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தில், ஜெயஸ்ரீ என்ற சிறுமியை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனித மிருகங்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என தேமுதிக நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தில், வீடு புகுந்து 10ம் வகுப்பு பயிலும், 14 வயது சிறுமியின் கைகளை கயிற்றால் கட்டி போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தை கேள்வியுற்று, மிகவும் மனவேதனை அடைந்தேன்.

Advertisment

மேலும், தந்தையிடம் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக சிறுமியை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியது எந்த வகையில் நியாயம்?. எனவே இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்கள் எங்கும் நடைபெறாத வண்ணம் அந்த மனித மிருகங்களுக்கு, உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.

சிறுமி ஜெயஸ்ரீயை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார்.

10th student villupuram dmdk vijayakanth
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe