Advertisment

குடும்பத்தினருடன் பிறந்த நாளை கொண்டாடிய விஜயகாந்த்... அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் வாழ்த்து...

Advertisment

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். குடும்பத்தினருடன் செல்பி எடுத்ததை தனது ட்விட்டர் பக்கத்தில் சேர் செய்துள்ளார். விஜயகாந்த்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தெலுங்கானா ஆளுவர் தமிழிசை உள்ளிட்டோர் வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

திரைத்துறை, அரசியல் மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பணியாற்றி நன்முத்திரை பதித்து வரும் விஜயகாந்த் அவர்கள் நல்ல உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் நீடூழி வாழ்ந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை வேண்டி, உளம்நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துகொள்கிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

விஜயகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ எனது உளம்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துகொள்கிறேன் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

birthday dmdk vijayakanth
இதையும் படியுங்கள்
Subscribe