நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் தமிழ்நாட்டில் உள்ள வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளில் மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. கடைசி மற்றும் 7-வது கட்டமாக 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு 19.05.2019 ஞாயிற்றுக்கிழமை ஓட்டுப்பதிவு நடந்தது.

Advertisment

இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதில் மத்தியில் பாஜக கூட்டணி அதிக இடங்களை பெறும் என்றும், தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தன.

vijayadharani congress mla

இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கொறடா விஜயதாரணி கூறுகையில்,

இந்த கருத்துக் கணிப்புகளை வைத்து நாம் எந்த முடிவுக்கும் வர வேண்டியதில்லை. கடந்த எட்டு தேர்தல் கருத்துக் கணிப்புகளில் ஒன்றுதான் சரியாக அமைந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று கூறியுள்ளனர். அதிமுக கூட்டணியும் சில தொகுதிகளை கைப்பற்றும் என்றும் வெளியிட்டுள்ளனர்.

Advertisment

தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஆதரித்துள்ளனர். தேர்தல் களத்தில் மக்களை சந்தித்தோம். மக்கள் மனநிலை எங்களுக்கு தெரியும். திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். மத்தியில் புதிய அரசு வரும். எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் சோனியா காந்தி. காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைய எதிர்க்கட்சிகள், மாநில கட்சிகள் விரும்புகின்றன. காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்பது 23ஆம் தேதி அனைவருக்கும் தெரிய வரும். இவ்வாறு கூறினார்.