ADVERTISEMENT

நம்மலாளத்தான் கெத்தா பேச முடியும்... விஜய பிரபாகரன்

02:54 PM Feb 23, 2019 | rajavel

ADVERTISEMENT

தேமுதிக பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை கும்பகோணத்தில் நடந்தது. இதில் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு பேசினார்.

ADVERTISEMENT

அப்போது, தேமுதிக வளரவில்லை. இறங்கிவிட்டது என்கிறார்கள். வாழ்க்கை என்றால் ஏற்றம் இறக்கம் இருக்கணும். தேமுதிமுகவுக்கு இன்னும் வலிமை இருக்கிறது. தேமுதிக ஓய்ந்துபோனது என்கிறார்கள். காலையில எழுந்து நான் எங்கப்பா முகத்துல முழிக்கிறேனோ இல்லையோ, எங்க அப்பாவை எல்லோரும் வந்து பார்க்கிறார்கள். வரப்போகிற தேர்தலில் கேப்டன் விஜயகாந்த் இல்லாமல் ஆட்சி அமையாது.


டெல்லியில் தமிழக மக்களுக்காக பேச யாரும் இல்லை. பேச வேண்டியவங்க பேசினால் நடக்கும். ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் எம்எல்ஏவாக இருந்தபோது, 2014ல் கூட்டணி வைத்து மணலூர்பேட்டையில் பாலம் வந்தது. வாயை மூடி சுத்துகிற ஆளு கிடையாது. வாயை திறந்து கேட்கணும் நம்ம தமிழ்நாட்டுக்கு. அழுகிற குழந்தைதான் பால் குடிக்கும். எங்க தமிழ்நாட்டுக்கு கொடு என்று கேட்போம். கேட்பது எங்கள் கடமை. கொடுப்பது உங்கள் கடமை.

விஜயகாந்த் சூப்பராக இருக்கிறார். எதற்கும் யாரும் பயப்படாதீங்க. அமெரிக்காவில் இருந்து வந்து ஐந்து நாள்தான் ஆகிறது. ஜீம் பூம் பான்னு சொல்லி தாவுன்னா தாவ முடியாது அவரால. கொஞ்சம் டைம் கொடுங்க. சிங்கம் மாதிரி சீக்கிரம் வருவார். நீங்க இங்கிருந்து உற்சாகம் கொடுக்க கொடுக்க, அங்கிருந்து அவர் வேக வேகமாக வந்து பார்ப்பார்.

என்ன விஜயகாந்த் பையன், சென்னையில் இருக்கார் என்று நினைக்காதீங்க. நான் உங்க நண்பன், உங்க கூட இருப்பதுதான் பெருமை. கேப்டன் பையன் என சொல்ல சீனெல்லாம் இல்ல. நம்மலாளத்தான் கெத்தா பேச முடியும். நம்ம மேல என்ன தப்பு இருக்கு?. நம்ம என்ன தப்பு செய்தோம் பயப்படுவதற்கு?. எல்லா அரசியல் தலைவர்கள் மேலேயும் குற்றச்சாட்டு இருக்கிறது. கேப்டன் மேல குற்றச்சாட்டு இருக்கிறதா? நிருபிக்க முடியுமா ஒரு குற்றச்சாட்டாவது?

கோபப்படுவாரு... ஆமா கோபப்படுவாரு... சிரிக்கிறப்ப சிரிப்பாங்க. கோபப்படும்போது கோபப்படுவாங்க. அது எல்லோருக்கும் உள்ள குணம்தான். எந்த குற்றச்சாட்டாவது சொல்ல முடியுமா? வரக்கூடிய தேர்தலில் அனைவரும் தைரியமாக இருங்கள். தேமுதிக ஓய்ந்தபோனது என்று சொன்னவர்களுக்கு சவுக்கடி கொடுத்ததுபோல மாத்தணும். இந்த ஒரு தேர்தலில் கேப்டன் என்ன சொல்கிறாரே அதற்கு கட்டுப்படுவோம். தனித் தனியாக எல்லாரும் யோசிச்சி, நான் அறிவாளி, நீ அறிவாளி என்று போனால் எல்லோரும் முட்டாளாகத்தான் ஆவார்கள். கேப்டன் சொல்வதை இந்த முறை அனைவரும் கேட்போம். செவ்வீங்களா? நம்பளாமா? இந்த போட்டோ எடுக்கிறது, சால்வை போடுறது, சவுண்டு விடுறதெல்லாம் வேணாம். நாம ஒன்னா இருந்து ஜெயிக்கணும். நம்ம கட்சிக்காரங்க எல்லோரும் ஒன்று சேர்ந்தால் இந்த தேர்தல் நமக்கு சாகதமாக இருக்கும். இவ்வாறு பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT