Advertisment

நான் திமிராகப் பேசுவதாக... விஜய பிரபாகரன்

பெரம்பலூர் மாவட்டம், சித்தளியில் நடந்த தேமுதிக பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டார்.

Advertisment

அப்போது பேசிய அவர், கேப்டன் விஜயகாந்த் சூப்பராக இருக்கிறார். யாரும் எதுவும் கவலைப்படாதீங்க. எல்லா தொகுதிகளுக்கும் பிரசாரத்திற்கு வருவார். யாரெல்லாம் தேமுதிக ஓய்ந்து போய்விட்டது எனக் கூறினார்களோ, அவர்களிடம் நாம் யாரேன நிரூபிக்கம் நேரம் இதுவாகும்.

vijaya prabhakaran

நம்மிடம் எல்லாமும் இருக்கிறது. வெற்றி வாய்ப்பை மட்டும் காட்டி விட்டோம் என்றால் தமிழகத்தில் எல்லா பார்முலாவும் மாறிவிடும். கேப்டன் அடைய வேண்டிய இடத்தை அடைந்து விடுவார்.

Advertisment

நான் திமிராக பேசுவதாக கூறுகிறார்கள். எல்லோருக்குமே அவங்க அப்பாதான் முதல் ஹீரோ, எனக்கு எங்க அப்பதாதான் ஹீரோ. ரீலிலும், ரியலிலும் அவர்தான எனக்குப் புடிச்ச ஹீரோ.

என் அப்பாவை என்னைவெல்லாம் சொல்லி பேசி இருக்கிறார்கள். ஒரு மகனால் அதையெல்லாம் சொல்ல முடியாது. எப்படியெல்லாம் எனக்கு வலித்திருக்கும். அதெல்லாம் நாகரீகமா? தேமுதிக காசு கொடுத்து சேர்க்குற கூட்டமில்லை. உணர்வு, ரத்தத்தோட சேர்ந்த பெரிய பந்தம். இவ்வாறு கூறினார்.

vijayakanth vijaya prabhakaran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe