Advertisment

கெட் அவுட் செய்திட உறுதியேற்போம் - கையெழுத்திட்ட விஜய்!

Vijay signs Lets commit to getting out 

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய் விக்கிரவாண்டியில் அக்கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி இருந்தார். அதனைத் தொடர்ந்து, பரந்தூரில் புதியதாக அமைய இருக்கும் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடி வரும் மக்களை அண்மையில் சந்தித்திருந்தார். அதோடு அக்கட்சி கடந்த 2ஆம் தேதி (02.02.2025) 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இந்நிலையில் த.வெ.க.வின் 2ஆம் ஆண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று (26.02.2025) காலை 10 மணி முதல் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த நிகழ்வானது மதியம் 01:30 மணி வரை நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது .இந்த விழாவில் பங்கேற்க சுமார் 2500 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பு விடுக்கப்பட்ட நிர்வாகிகள், அனுமதிச் சீட்டு இருந்தால் மட்டுமே விழா நடைபெறும் இடத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அக்கட்சியின் சார்பில் 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 15 பேர் என்ற அளவில் சுமார் 2500 பேர் அனுமதிக்கப்பட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய சூழலில் தான், “வாக்கு வங்கிக்காக சாதி, சீர்கேடுகளை எதிர்க்க அஞ்சும் நயவஞ்சகர்களுக்கு கெட் அவுட் (#GetOut)” என விழா நடைபெறும் இடத்தில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதோடு பேனரில், ‘புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக்கொள்கை திணிப்பிற்கு எதிராகப் போராட உறுதியேற்போம்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

இந்த பேனரில் அக்கட்சியின் தலைவர் விஜய் கையெழுத்திட்டு த.வெ.க. சார்பில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். விழா மேடையில் இருந்த அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகளான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் விஜயைத் தொடர்ந்து கையெழுத்திட்டனர். அதே சமயம் விழா மேடையில் இருந்த தேர்தல் வியூக வகுப்பு பிரசாந்த் கிஷோர் இதில் கையெழுத்திட மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக விஜய் நீலாங்கரை வீட்டில் இருந்து ஆண்டு விழா நடைபெறும் ஓட்டலுக்கு காரில் வருகை தந்தார். அப்போது அங்கு அவருக்கு தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த விழாவையொட்டி அக்கட்சியின் தலைவர் விஜய் சிறப்பு உரை நிகழ்த்த உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு சட்டமன்ற தேர்தலுக்கான வியூகம், பிரச்சார சுற்றுப்பயணம், தேர்தலில் கூட்டணி அமைப்பது உள்ளிட்டவை தொடர்பாகவும் விஜய் உரையாற்ற வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.

signature
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe