“Vijay film? An Ajith film?” Anbumani Hot talk

பசுமைத் தாயகம் நடத்தும் கருத்தரங்கு நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இதன் பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் தமிழகத்தில் மக்களுக்கு சினிமா துறையின் மேல் உள்ள மோகம் பெரிதளவில் அரசியலில் இல்லை. மக்களுக்கு ஏற்படும் அரசியல் மீதான விழிப்புணர்வை சினிமா திசைதிருப்புகிறதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

Advertisment

அதற்குப் பதிலளித்துப்பேசிய அவர், “ஊடகங்கள் பேசுவது தான் மக்களுக்கு போய்ச்சேருகிறது. ஒரு மாதமாக இந்தப் படம் வருமா;அந்தப் படம் வருமா;அஜித் படமா;விஜய் படமா;எது வரும்;எந்தப் படத்தின் பாடல் வரும்?அதைத்தான் ஒரு மாதமாக பார்த்துக் கொண்டுள்ளோம். தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள்உள்ளன. வேலைவாய்ப்பு கிடையாது. விவசாயிகள் பிரச்சனை. இப்பொழுது கரும்பு பிரச்சனை. 6 அடி இருக்கும் கரும்பைத்தான் கொள்முதல் செய்வோம் என அரசு சொல்கிறது.

Advertisment

6 அடி கரும்பு எப்படி வரும். அதிகளவில் ரசாயன உரம் போட்டால் தான் கரும்பு 6 அடிக்கு வரும். இல்லையென்றால், சாதாரணமாக 5 அடி தான் வரும். 5 அடி கரும்பை சாப்பிடமாட்டீர்களா என்ன? அது என்ன கணக்கு?6 அடி கரும்பு தான் வாங்குவோம் எனச் சொல்வது. விவசாயிகள் 6 அடிக்கு எங்குச் செல்வார்கள். அது என்ன கொள்கை? யார் உங்களைத்தவறாக வழிநடத்துகிறார்கள்?நிச்சயமாக முதல்வர் தான் அறிவிக்க வேண்டும். விவசாயிகள் தானே. 5 அடி இருந்தாலும் பரவாயில்லை என முதல்வர் தான் வாங்கிப் போடவேண்டும்.

அரசை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டுள்ளார்கள். அதை அரசு வாங்க வேண்டும். இது பிரச்சனை. அதோடு இல்லாமல் போதைப் பொருள் தமிழகத்தில் சரளமாகக் கிடைக்கின்றது. இதில் கவனம் செலுத்த வேண்டும். இது குறித்தான செய்திகள் மக்களிடம் போய்ச்சேர வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி விவசாயிகளுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை. இது போன்ற பிரச்சனைகள் அதிகமாக உள்ளது” எனக் கூறினார்.