Advertisment

விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரை கிழித்து எறிந்த போலீசார்! தேனியில் பரபரப்பு!

theni

'எம்ஜிஆரின் மறு உருவமே' என்று நடிகர் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரை போலீஸார் கிழித்து எறிந்ததால் தேனியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

தேனி என்.ஆர்.டி. சாலையில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் தேனி மாவட்ட இளைஞரணி சார்பில் பரபரப்பான வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தன. அதில், நடிகர் விஜய் எம்ஜிஆர் போல் உடை அணிந்து சைக்கிள் ஓட்டுவது போலவும் அந்த சைக்கிள் ரிக்ஷாவின் பின்னால் எம்ஜிஆர் அமர்ந்திருப்பது போன்றும் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் இந்த போஸ்டரில் எம்ஜிஆரின் மறு உருவமே, மாஸ்டர் வாத்தியாரே அழைக்கிறது தமிழகம், தலைமை ஏற்க 2021 உங்கள் வரவை காணும் தமிழகம் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

Advertisment

இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பலரும் இதை வேடிக்கை பார்த்து சென்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அப்பகுதிகளுக்கு சென்று போஸ்டரை கிழித்து எறிந்தனர். அதன் பின்னர் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதாக விஜய் மக்கள் இயக்கத்தின் தேனி மாவட்ட இளைஞரணி தலைவர் பிரகாஷ் மீது தேனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தியும் வருகின்றனர்.

vijay fans Theni
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe