நடிகர் விஜய் நடிக்கும் 62வது படம் சர்கார். இப்படத்தின் பெயர் வெளியிட்டவுடனேயே அவரது ரசிகர்கள் கொண்டாடினார்கள். படத்தின் போஸ்டர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
அது ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், தற்போது படத்தின் கதை இதுதான் என்று இன்னொரு பரபரப்பையும் கூட்டியிருக்கிறது.இப்படத்தின் என்ன கதை என்னவாக இருக்கும் என்று தற்போது செய்தி வெளியாகி உள்ளது. பொதுமக்களுக்கு இயல்பாக உதவி செய்யும் எண்ணம் கொண்ட விஜய் ஐ.டி. துறையில் பணியாற்றுவார். பொதுமக்களின் பிரச்சனைகளை அரசுக்கும், மக்கள் பிரதிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்வார். ஆனால் அரசும், மக்கள் பிரதிநிதிகளான அரசியல் வாதிகளும் அதனை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவதால், அவர்களுடன் மோதுகிறாராம் விஜய்.
தொடர்ந்து இப்படி நடக்கும்போது, மக்களுக்கு தங்கு தடையின்றி அரசின் உதவிகள், பயன்கள் கிடைக்க செய்வதற்காக அதிரடியாக ஒரு முடிவெடுத்து, அதன்படி அரசியலில் ஈடுபடுகிறார். தேர்தலை சந்தித்து சர்காரை கைப்பற்றி விஜய் முதல்வராவது போல் கதை வருகிறதாம்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
இந்த கதைப்படி படம் வந்தால் விஜய்யின் அரசியல் பயணத்துக்கு ஒரு படிக்கல்லாகவே அமையும் என்கின்றனர் ரசிகர்கள்.