உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்... ஓபிஎஸ்ஸிற்கு அதிர்ச்சி கொடுக்க ரெடியாகும் எடப்பாடி!

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், தங்க தமிழ் மகன் விருதினைத் தொடர்ந்து, இரண்டாவதாக சர்வதேச வளரும் நட்சத்திரம்- ஆசியா விருதும் பெற்றுள்ளார். இன்னும் பல விருதுகள் அவருக்காகக் காத்திருக்கின்றன என்று அவரது விசுவாசிகள் உற்சாகமாக சொல்கின்றனர். அதே போல் என்ன தான் இ.பி.எஸ்.ஸிடம் அதிகாரம் இருந்தாலும் தற்போது வரை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளில் பெரும்பாலனோர் ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் என்று ஒரு ரிப்போர்ட் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்தது.

admk

தற்போது உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நேரம் என்பதால், ஓ.பி.எஸ். இமேஜ் டெவலப் ஆவதை இ.பி.எஸ். விரும்பவில்லை என்கின்றனர். அமெரிக்காவிலிருந்து ஓ.பி.எஸ். திரும்பி வந்ததும் அவருக்குத் தரப்படும் முக்கியத்துவத்தையும் பழையபடி குறைக்க எடப்பாடி திட்டம் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் இருந்து வரும் ஓபிஎஸ்ஸிற்கு எடப்பாடி அதிர்ச்சி கொடுக்க தயாராகி வருகிறார் என்று கூறுகின்றனர்.

admk eps ops politics report
இதையும் படியுங்கள்
Subscribe