Advertisment

திமுகவின் வெற்றி இவர்களால் தான்... பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்... அமித்ஷாவின் அதிரடி திட்டம்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து மத்திய உளவுத் துறையான ஐ.பி.யிடம் ஒரு ரிப்போர்ட் கேட்டுள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அவர்கள் தந்த ரிப்போர்ட்டில் தி.மு.க.வின் முதன்மைத் தலைவர்களான தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் நேரு, துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, திருவண்ணாமலை மா.செ. எ.வ.வேலு, விழுப்புரம் மா.செ. பொன்முடி, எம்.பி. ஆ.ராசா போன்றவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலைத் தந்து, "இவர்களை தேர்தல் களத்தில் முடக்கினால் தேர்தலில் பாதி வெற்றி' என்றுள்ளது. அதனை பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் முரளிதரராவ், மத்திய அமைச்சர்கள் பியூஷ்கோயல், நிர்மலா சீதாராமன் ஆகியோரிடம் தந்து, தேர்தல் குறித்து ஆலோசித்துள்ளனர்.

Advertisment

dmk

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

"ஆளும்கட்சியாக இருந்தாலும் ஜாக்கி இல்லாத குதிரையாக உள்ளது அ.தி.மு.க. தேர்தல் நேரத்தில் எடப்பாடி, ஓ.பி.எஸ். உத்தரவையெல்லாம் அவர்கள் கட்சியினர் மதிக்கமாட்டார்கள். இவர்களை தி.மு.க. தலைவர்கள் ஈஸியாக மடக்கி விடுவார்கள். அதனால் தி.மு.க. பிரமுகர்களை பார்த்து பயப்படாத, பணத்தை தாராளமாக இறைக்கக்கூடிய ஆட்களை நாம் களத்தில் இறக்கினால், தி.மு.க. தலைவர்களை அவர்கள் மாவட்டத்தில் முடக்கிவிடலாம், அப்படி செய்தால் பாதி வெற்றி என்றுள்ளார்கள்.

தி.மு.க. பொருளாளர் துரைமுருகனை எதிர்த்து, பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியில், பா.ஜ.க. சார்பாக தேர்தல் வேலை செய்வதற்காக, வேலூர் எம்.பி. தேர்தலில் துரைமுருகன் மகனிடம் தோற்றுப்போன ஏ.சி. சண்முகத்தை கேட்டுள்ளது பா.ஜ.க. "நான் செலவு செய்கிறேன், எனக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் வேண்டும்' என அவர் கேட்டுள்ளாராம். திருவண்ணாமலையில் எ.வ.வேலுவை எதிர்க்க, சினிமா தயாரிப்பாளரும், ஃபைனான்ஸ் அதிபருமான தணிகைவேலை களமிறக்கலாமா என ஆலோசித்துள்ளது'' என்றார் உளவுத் துறையில் உள்ள முக்கிய அதிகாரி.

யார் இந்த தணிகைவேல்?

திருவண்ணாமலையில் தி.மு.க. சார்பில் நகராட்சி சேர்மனாக, எம்.பி.யாக, எம்.எல். ஏ.வாக இருந்தவர் முருகையன். அவரது நெருங்கிய உறவினர் தணிகைவேல். மத்திய அமைச்ச ராக செஞ்சி.ராமச்சந்திரன் இருந்தபோது, அவருடன் இருந்ததால் டெல்லி லாபியும் அத்துப்படி. இவர் மீது வைகோவுக்கு அதிருப்தி ஏற்பட்டதால் ம.தி.மு.க.வில் இருந்து நீக்கினார். பின்னர், தே.மு.தி.க.வில் இணைந்து பதவியைப் பெற கோடிகளை வாரியிறைத்தார். சில சிக்கல்களில் சிக்கிய தணிகைவேல், தே.மு.தி.க.வில் இருந்து விலகி தி.மு.க. மா.செ. எ.வ.வேலுவை சந்தித்து தி.மு.க.வில் இணைந்தார். லோக்கல் பாலிடிக்ஸால் விலகிக்கொண்டார். தற்போது பா.ஜ.க.வின் மேல்மட்ட தலைவர்கள் சிலரின் நட்பு பட்டியலுக்குள் சென்றுள்ளார். கடந்த 20 வருடங்களாக பணத்தை வாரி வழங்கி தனக்கென நகரத்தில் ஒரு இளைஞர் வட்டத்தினை உருவாக்கி வைத்துள்ளார்'' என்றார்கள் திருவண்ணாமலை அரசியலை அறிந்தவர்கள்.

bjp

தணிகைவேல் ஆதரவாளர்கள் ஒருவர் நம்மிடம், "கடந்த வாரத்தில் திருவண்ணாமலை வந்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் எ.வ.வேலுவை எதிர்க்க எந்தக் கட்சியிலும் பிரமுகர்கள் இல்லையாம். அதனால் என்னை கட்சியில் இணைத்து "அவருக்கு எதிராக அரசியல் செய்யுங்கள்' என பா.ஜ.க. மேல்மட்டத்தில் கேட்கிறார்கள். நானும் பா.ஜ.க.வில் சேர முடிவு செய்துள்ளேன், 5 ஆயிரம் பேரோடு அங்கு போனால்தான் எனக்கு மரியாதை. நீங்கள் என்னுடன் வரவேண்டும் எனக் கேட்டார்'' என்றார்கள்.

இதுகுறித்து தணிகைவேல் கருத்தறிய அவரை செல்போனில் தொடர்புகொண்டு பேசியபோது, "பா.ஜ.க.வில் நான் சேரப்போவது உண்மைதான். நிதியமைச்சர் நிர்மலா மேடம், முன்னிலையில் இணைகிறேன். யாரையும் எதிர்க்க வரவில்லை, தலைமை என்ன சொல்கிறதோ அதைச் செய்யப்போகிறேன்'' என்றார்.

இதுபற்றி டெல்லியுடன் நேரடித் தொடர்புடைய பா.ஜ.க. பிரமுகர் ஒருவருடன் நாம் பேசிய போது, "இன்னும் கட்சியில் சேராத தணிகைவேலை திரு வண்ணாமலை மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கிறார்களா என தெரியாது' என்றவர், "திருவண்ணாமலையை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவரின் மகள் ஐதராபாத்தில் செட்டிலாகியுள்ளார். அவர் சமீபத்தில் தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் முரளிதரராவை சந்தித்து பா.ஜ.க.வில் இணைந்தார். அந்தப் பெண்மணி மூலமாக முரளிதரராவ் வட்டத்துடன் நெருங்கி, அங்கிருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வட்டத்தில் இணைந்து டெல்லியில் தணிகைவேல் லாபி செய்கிறார் என்கிற தகவல் எங்களுக்கு கிடைத்தது'' என்றார். கூடுதலாக, "சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.வின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் 11 தொழிலதிபர்களை செலவு செய்யச்சொல்லி உத்தரவிட்டுள்ளது எங்கள் கட்சி தலைமை. அதில் 4 கல்வி நிறுவனங்களின் அதிபர்கள் உட்பட 11 பேர் அடக்கம். அதில் சிலர் நேரடி அரசியலிலும் இறங்குவர், மற்றவர்கள் பண உதவி மட்டும் செய்யவுள்ளார்கள்'' என்றார்.

amithsha elections politics stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe