Advertisment

“நீ பால ஊத்து..நான் பட்டாச கொளுத்துறேன்”அதிமுக வெற்றி..! தொண்டர்கள் குதூகலம்..! (படங்கள்) 

Advertisment

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் திமுக வேட்பாளர் புகழேந்தியைவிட 44,782 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்துள்ளார். அதேபோல், நாங்குநேரி அதிமுக வேட்பாளர் நாராயணன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனைவிட 32,333 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்துள்ளார். இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றிப்பெற்றதை முன்னிட்டு அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்தனர். தொண்டர்கள் பலரும் இரட்டையிலை சின்னத்தை பிடித்தாவாறு நடனமாடியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

nanguneri Vikravandi Celebration admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe