Advertisment

தீவிர சிகிச்சை பிரிவில் வேல்முருகன் அனுமதி

velmurugan

Advertisment

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பத்தினரையும், குண்டடி பட்டு மருத்துவமனையில் இருப்போரையும் சந்தித்து ஆறுதல் கூற அனுமதிக்க வேண்டும் என 25-05-2018 அன்று தூத்துக்குடி சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் விமான நிலையத்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் சென்னை கொண்டுவரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்டது முதல் நேற்று (28-05-2018) வரை நீர் கூட அருந்தமல் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

அவரை ம,தி,மு,க, பொதுச்செயலாளர் வைகோ நேற்று உண்ணாவிரதத்தை கைவிடுமாறு புழல் சிறையில் நேரில் சென்று வலியுறுத்தியதையடுத்து, உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிட்ட வேல்முருகன், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மருத்துவ பரிசோதனையில் அவருக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அவரை தீவிர சிகிச்கை பிரிவுக்கு மாற்றியுள்ளார்கள்.

arrested hospital velmurugan
இதையும் படியுங்கள்
Subscribe