Advertisment

சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் திமுக கூட்டணி வைக்காது... சீமான் பேச்சு

ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமியை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேலூரில் பிரச்சாரம் செய்தார்.

Advertisment

Seeman

அப்போது அவர்,திமுக இன்னும் கொஞ்ச நாள் காங்கிரஸ் கட்சியை வைத்திருக்கும். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி வைக்காது. இதை எழுதி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். இப்பவே கே.என்.நேரு, உதயநிதி பேசுகிறார்கள். காங்கிரஸ் கட்சியை ஏன் வைத்துக்கொண்டு உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். எதற்காக என்றால் காங்கிரஸ் கட்சி இப்போது தலைவர் இல்லாத கட்சியாக இருக்கிறது. இதுவரக்கும் தலைவரை தேர்வு செய்ய முடியவில்லை. அதுதான் அவர்கள் நிலைமை.

பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியுடன் இருந்தால் பாஜக கோபப்படும் என்று திமுக நினைக்கிறது. மத்திய அரசு என்ன சொல்லுகிறதோ அதோடு ஒத்துப்போயிடுவோம் என்று நினைக்கிறது. இல்லையென்றால் ஒரே நேரத்தில் ஆயிரம் அதிகாரிகளை இறக்கி ரெய்டு நடக்கும்.

Advertisment

தன்னாட்சி அமைப்புகள் இந்தியாவில் இருக்கிறது. தேர்தல் ஆணையம், நீதிமன்றம், வருமானவரித்துறை, சிபிஐ என இவைகளெல்லாம் தனித்து இயங்கக்கூடிய அமைப்புகள். இவையெல்லாவற்றையும் தனது ஐந்து விரல்களில் வைத்திருக்கிறார் பிரதமர் மோடி. இவ்வாறு பேசினார்.

Seeman talk Parliamentary election Vellore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe