Advertisment

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் குழு நியமனம்: சீமான் அறிவிப்பு

வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் தலைமையில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு திமுக தனது பணிகளை தொடங்கிவிட்டது. இதேபோல் அதிமுக கூட்டணி வேட்பாளர் நேற்று தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

Advertisment

naam tamilar seeman

இந்த நிலையில் தேர்தல் களப்பணிகளைத் திட்டமிட்டு செயற்படுத்தும் பொருட்டு நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் நா.சந்திரசேகரன் தலைமையில் தலைமை தேர்தல் குழு அமைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இந்த தேர்தல் குழுவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தலைமை தேர்தல் குழு பொறுப்பாளர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளைச் சேர்ந்த தொகுதிப் பொறுப்பாளர்களையும், ஒதுக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களையும் உள்ளடக்கிய தேர்தல் பணிக்குழு அமைத்து உடனடியாக தேர்தல் களப்பணிகளைத் தொடங்கிட வேண்டும் என்றும்,இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், கட்சி உறுப்பினர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

Announcement seeman Naam Tamilar Katchi Parliamentary election Vellore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe