வேலூர் தொகுதியில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார்: பிரேமலதா 

premalatha

தேமுதிக தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துக்குமரன். இவர் சென்னை கே.கே.நகர் முனுசாமி சாலையில் ஸ்ரீமுத்து போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளார். இந்த ஸ்டூடியோவின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி இனிப்புகளை வழங்கினார்.

premalatha

premalatha

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்,

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தே.மு.தி.க. தயாராக உள்ளது. அ.தி.மு.க. உடன்கூட்டணி தொடரும். வேலூர் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யாமல் தேர்தலை ரத்து செய்தது நியாயம் அல்ல. தற்போது அதே வேட்பாளர் போட்டியிடுகிறார். பணப்பட்டுவாடா நடக்கிறது. தகுதி நீக்கம் செய்திருந்தால் இதற்கு தீர்வு வந்திருக்கும். புதிய கல்வி கொள்கை என்பது மாணவர்களின் போக்கிற்கே விட வேண்டும். கல்வி வியாபாரம் ஆகி வருகிறது. வேலூர் தொகுதியில் விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என்றார்.

campaign Election interview Parliament premalatha vijayakanth Vellore vijayakanth
இதையும் படியுங்கள்
Subscribe