வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குபதிவு ஆகஸ்ட் 5ந்தேதி நடைபெற்றது. 1553 வாக்குசாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் அந்த வாக்குப்பெட்டிகள், ராணிப்பேட்டை அரசு கல்லூரியில் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த அறையை தேர்தல் அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சீல் வைத்துள்ளனர்.

Advertisment

vellore current status of election candidates

ஆகஸ்ட் 9ந்தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 6 அறைகளில் இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது . ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 டேபிள்கள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகின்றன. அதேநேரத்தில் மற்றொரு அறையில் தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெறவுள்ளன.

Advertisment

ஆகஸ்ட் 9ந்தேதி காலை 11 மணிக்கெல்லாம் முன்னணி நிலவரம் தெரிந்து, யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குசாவடிக்குள் முகவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மீடியாவினர் தவிர மற்றவர்கள் அனுமதியில்லை எனக் கூறப்பட்டுள்ளது. செல்போன் அனுமதியில்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது. அனைவருக்குமான உணவை தேர்தல் பிரிவே ஏற்பாடு செய்துள்ளது, இதற்கான தொகையை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் வசூலித்துள்ளனர். நாளை வாக்குஎண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்நிலையில் இந்த தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த், அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட புதியநீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி போன்றவர்கள் என்ன செய்கிறார்கள் என அந்த கட்சி தரப்பில் விசாரித்தபோது, கதிர்ஆனந்த், காஞ்சிபுரம் அத்திவரதர், மகாதேவமலை சித்தர், முருகர் கோயில் என சென்று வேண்டிக்கொண்டு வந்தார்.

ஏ.சி.சண்முகம், காஞ்சி காமாட்சியம்மன் கோயில், குடியாத்தம் செல்லியம்மன் கோயில், குலதெய்வ கோயில் என வலம் வந்துக்கொண்டு இருக்கிறார். நாதக தீபலட்சுமி பெரியதாக எதிலும் ஆர்வம் காட்டிக்கொள்ளவில்லை என்றார்கள்.