Advertisment

வேலூர் மாவட்டம் : திமுக வேட்பாளர்களும் விவரங்களும்!

dmk

வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) என 5 தொகுதிகள் உள்ளன. இந்த 5 தொகுதிகளில், 4 தொகுதிகளில் அதிமுகவும், ஒரு தொகுதியில் புரட்சி பாரதமும் போட்டியிடும் என வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது அதிமுக. புரட்சி பாரதம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது. எனவே, 5 தொகுதிகளிலும் உதயசூரியனும், இரட்டை இலையும் போட்டியிடுகின்றன.

Advertisment

vellore constituency

வேலூர் – கார்த்திக்:வேலூர் மாநகர மாவட்டச் செயலாளராக உள்ளார். வேலூர் மாநகராட்சியின் முதல் மேயர். 2016ல் வேலூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர், மீண்டும் இரண்டாவது முறையாக அதே தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

Advertisment

vellore constituency

காட்பாடி – துரைமுருகன்:திமுக பொதுச்செயலாளராக உள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உள்ளார். தொடர்ச்சியாகப் பல முறை இந்தத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருந்துவருகிறார். இந்தமுறையும் இவருக்கே சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

vellore constituency

அணைக்கட்டு – நந்தகுமார்:வேலூர் மாவட்டச் செயலாளராக உள்ளார். இதே தொகுதியில் 2016ல் நின்று வெற்றி பெற்றவர், மீண்டும் இரண்டாவது முறையாக அதேதொகுதியில் சீட் பெற்றுள்ளார்.

vellore constituency

கே.வி.குப்பம் (தனி) – சீத்தாரமான்:கே.வி.குப்பம் ஒன்றியக் குழுத் தலைவராக இரண்டு முறை இருந்துள்ளார். 2011, 2016 என இரண்டு முறை சீட் பெற்று தோல்வியைச் சந்தித்தவர். மூன்றாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

vellore constituency

குடியாத்தம் (தனி) – அமுலு:குடியாத்தம் ஒன்றியச் செயலாளர். கல்லூர் ரவியின் தம்பி மனைவி. கடந்த முறை கே.வி.குப்பத்தில் நின்றார். இவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர், இவரது கணவர் வன்னியர் என்பதால், அங்கு சர்ச்சை எழுந்தது. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தார். இந்த முறை குடியாத்தம் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

constituency Vellore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe