'வேலூர் தொகுதி வேட்பாளர் மாற்றம்' - டிடிவி.தினகரன் அறிவிப்பு!

vellore candidate changed ttv dhinakaran announced

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இன்று (17/03/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அ.ம.மு.க.வின் ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின் படி, 06/04/2021 அன்று நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த அப்புபால் வி.எம்.பாலாஜி மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக அ.ம.மு.க.வின் வேட்பாளராக வி.டி.தர்மலிங்கம் அறிவிக்கப்படுகிறார்." இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

vellore candidate changed ttv dhinakaran announced

அதேபோல் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் இரண்டு பேர் கொண்ட இறுதிக் கட்ட வேட்பாளர் பட்டியலை டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ளார். அதன்படி, காலாப்பட்டு சட்டமன்றத் தொகுதியில் பி.கலியமூர்த்தி, காரைக்கால் (தெற்கு) சட்டமன்றத் தொகுதியில் எஸ்.முகமது சித்திக் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

AMMK PARTY tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Subscribe