Advertisment

வேட்புமனுவை தாக்கல் செய்தார் வெல்லமண்டி என்.நடராஜன்...!

Vellamandi N. Natarajan filed the nomination

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறுகிறது.அஇஅதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் சூராவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 12ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (15.03.2021) அஇஅதிமுக வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்கின்றனர்.

Advertisment

அதன்படி, திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, மேற்கு, திருவரம்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி, மணப்பாறை உள்ளிட்ட 9 சட்டமன்றத் தொகுதிகளில், லால்குடி சட்டமன்றத் தொகுதி தவிர்த்து மீதமுள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்கின்றனர்.திருச்சி மாநகரில் கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர், அமைச்சர் வெல்லமண்டி N.நடராஜன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Advertisment

முன்னதாக திருச்சி எடத்தெரு அண்ணா சிலையில் இருந்து அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்தார் நடராஜன்.பின்னர் அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போதுதமிழ் மாநில காங்கிரஸ் திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் நந்தா செந்தில்வேல், பாரதிய ஜனதா கட்சி திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

admk trichy vellamandi n. natarajan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe