Advertisment

''வாரிசுகள் கையில் வேதா இல்லம்... கட்சிக்கு பாதிப்பு'' - உயர் நீதிமன்றத்தில் அதிமுக மனு!

 '' Veda house in the hands of heirs ... harm to the party '' - AIADMK petition in the High Court!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சட்டமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றியது. இந்நிலையில், வேதா நிலையத்தை அரசுடைமையாக்கிப் பிறப்பித்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பைக் கடந்த நவம்பர் 24ஆம் தேதி அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். சேஷசாயி வழங்கினார்.

Advertisment

அதில், "வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி தமிழ்நாடு அரசு பிறப்பித்த சட்டம் ரத்து செய்யப்படுகிறது. நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் எதுவும் செல்லாது. வேதா நிலையத்தை தீபா, தீபக்கிடம் மூன்று வாரங்களில் ஒப்படைக்கச் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் கடந்த 29ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தஎடப்பாடி பழனிசாமி, வேதா இல்லம் விவகாரத்தில் கட்சியினருடன் ஆலோசித்து மேல்முறையீடு செய்யப்படும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில், ஜெ.வின் வேதா இல்லம் தொடர்பாக மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி அதிமுக உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளது. ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினர் சி.வி. சண்முகம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள அந்த மனுவில், மேல்முறையீடு செய்ய தற்போதைய அரசு அக்கறை காட்டாததால் அறக்கட்டளை என்ற முறையில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. வேதா நிலையத்தை வாரிசுகளிடம் ஒப்படைத்தால் கட்சிக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல் நினைவு இல்லமாக மாற்றுவது அரசு பணத்தை வீணடிக்கும் செயல் என்ற தனி நீதிபதியின் கருத்து தேவையற்றது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

house jayalalitha highcourt
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe