கடந்த 13.10.2019 அன்று விக்கிரவாண்டியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ராஜீவ் காந்தி கொலை குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விக்கிரவாண்டிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இருந்து விரிவான அறிக்கையை தமிழக தலைமை அதிகாரி சத்யா பிரதா சாஹு கேட்டிருக்கிறார். சீமான் என்ன பேசினார், எங்கு பேசினார், வீடியோ ஆதாரம் போன்றவை தொடர்பான விரிவான அறிக்கையாக கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இந்த நிலையில் சீமான் கூறிய கருத்துக்கு அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் இது பற்றி கூறும் போது, சீமானின் கோபம் சரி தான். ஆனால் விடுதலை புலிகளுக்கு எதிரான கருத்தை எச்சரிக்கையுடன் தெரிவிக்க வேண்டும். அதே போல் ராஜிவ் காந்தியை கொன்றதாக விடுதலை புலிகள் எந்த இடத்திலேயும் சொன்னது இல்லை என்றும் கூறியுள்ளார்.