ADVERTISEMENT

''எங்களுக்கு எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கவில்லை'' - திருமாவளவன் பேட்டி!

10:04 AM Sep 22, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் விடுபட்ட மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ள நிலையில், வேட்பாளர் பட்டியலும் வெளியாகிவருகிறது. இந்நிலையில், திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''பேச்சுவார்த்தையில் கிட்டத்தட்ட 90 சதவீதம் சுமுகமான முடிவு ஏற்பட்டிருக்கிறது. நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கான இடங்கள் கிடைக்கவில்லை, தொகுதிகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட ஒரு நல்லிணக்கமான முறையிலே பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. எனவே கிடைத்த இடங்களில் தனி சின்னத்தில் விசிகவினர் போட்டியிடுவோம். ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் தென்னைமர சின்னத்திலும், மாவட்டக் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடுபவர்கள் கைக்கடிகார சின்னத்திலும் போட்டியிட முடிவு செய்துள்ளோம்'' என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT