காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டுவதில் கர்நாடகம் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறது. அந்த வகையில் புதிதாக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மையும் அணைக்கட்டியே தீருவோம் என உறுதியாகக் கூறியுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேகதாது அணை கட்ட தமிழக பாஜக அனுமதிக்காது. இதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்போம் எனத் தெரிவித்திருந்தநிலையில்நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது.
இந்நிலையில் பாஜகவின் இந்த நிலைப்பாடு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் உள்ளதிமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பின்விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், ''வாக்கு வங்கிக்காக தமிழகத்தில் ஒரு வேடம்கர்நாடகாவில் ஒரு வேடம்என பாஜகவினர் பலவேடம்போடுவார்கள். கேல்ரத்னாவிருதில்ரஜீவகாந்தி பெயரை நீக்கியஇந்த அநாகரீக அரசியலைகைவிட வேண்டும். பல பிற்படுத்தப்பட்டசாதிகளைஒன்றிய அரசின் பட்டியலில்இணைக்க முதல்வரிடம் வலியுறுத்தினேன்'' என்றார்.