Skip to main content

பாஜகவை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “ராகுல் காந்தியின் பதவிப் பறிப்பு! தேர்தல் சனநாயகத்தை ஒழித்துக் கட்டுவதற்கான ஃபாசிச பாஜக அரசின் திட்டமிட்ட அரசியல் சதியைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் நடைபெறும் சனநாயகப் பாதுகாப்பு அறப்போர்” எனத் தெரிவித்திருந்தார். 

 

பல்வேறு கட்சியினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளார்கள். காங்கிரஸ் கட்சியினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்வில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன், “பிரதமர் நரேந்திர மோடி அதானிக்கு ஏஜெண்ட். இதைவிடக் கேவலம் வேறொன்றும் இருக்க முடியாது. தனிப்பட்ட முதலாளிக்கு 140 கோடி மக்களுக்கான பிரதமர் ஏஜெண்ட்டாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். அதானியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே நாடாளுமன்றம் நடக்கவில்லை. அதானி என்ற நபர் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.

 

2019ல் போடப்பட்ட வழக்கிற்கு 2023ல் தீர்ப்பு வழங்குகிறார்கள். அந்த தீர்ப்பில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை எனச் சொன்னதோடு மட்டுமல்லாமல் 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கிறது.  தீர்ப்பு வழங்கப்பட்டாலும் தீர்ப்பு அமலாகவில்லை. ஆனால் அவசரமாக 24 மணிநேரத்தில் பதவி பறிக்கப்படுகிறது. வீட்டைக் காலி செய் என உத்தரவிடப்படுகிறது. இது அப்பட்டமான ஜனநாயக படுகொலை” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'தேர்வை ரத்து செய்வதற்கு பதிலாக பாஜக ஆட்சியை ரத்து செய்யலாம்' - அகிலேஷ் கருத்து

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
'Instead of canceling the election, we can cancel the BJP rule' - Akhilesh's opinion

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

நீட், நெட் தேர்வு முறைகேடு புகார்கள் தொடர்ந்து தேசிய தேர்வு முகமையின் தலைவர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபேத்குமார் சிங்கை நீக்கி புதிய தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமிக்கப்பட்டார். நுழைவுத் தேர்வில் வெளிப்படைத்தன்மை கொண்டுவர உயர்மட்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. நீட் தேர்வு ரத்து குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,'முதுநிலை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மிகுந்த விரக்தி அடைந்துள்ளனர். இது திடீரென நடக்கும் நிகழ்வல்ல. மத்திய தேர்வு முகமையின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணி. மாணவர்களின் எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மருத்துவம் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகளில் நேர்மையான, சமமான தேர்வு முறையை கொண்டு வர வேண்டும்' என வலியுறுத்தி இருந்தார்.

nn

இந்நிலையில் இதேபோல சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ள கருத்தில், 'தேர்வுகளை ரத்து செய்வதற்கு பதிலாக பாஜக அரசை ரத்து செய்யலாம் என மக்கள் சொல்கிறார்கள்' எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

Next Story

'நான் ஆர்ப்பாட்டத்துக்கே வரலங்க; விட்ருங்க' - கதறிய முதியவர்

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
'I am not concerned about the demonstration; -the wailing old man

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 4 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தை கண்டித்தும். இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும், உண்மை குற்றவாளிகளைக் கைது செய்ய கோரியும் வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட வந்த பாஜகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கரை வேட்டியுடன் வந்தவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ய அழைத்தபோது, 'நான் இல்லை என்னை விடுங்க.. நான் போறேன்...' என வாகனத்தில் ஏறாமல் ஒருவர் அடம் பிடித்தார். வேட்டியுடன் ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர் கைது எனக் காவல்துறை அழைத்தவுடன் கூச்சலிட்டு கதறிய முதியவரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.