vck pot logo election commission

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6- ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இதற்காக தமிழகம் முழுக்க 234 தொகுதிகளில் இருந்து மொத்தம் 7,255 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 4,455 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டும், 2,739 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டும், 355 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டும் உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தமிழக சட்டமன்றத் தேர்தலில் 4,161 பேர் போட்டியிடுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

vck pot logo election commission

இந்நிலையில், தற்போது தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 'பானை' சின்னத்தை ஒதுக்கியுள்ளது இந்தியத்தேர்தல் ஆணையம். திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 6 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தில் ஆறு தொகுதிகளுக்கும் பானை சின்னம்! புதுவையில் போட்டியிடும்ஒரு தொகுதிக்கும் பானை சின்னம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.