நடந்து முடிந்த நாடாளுமனற்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். இன்று மதுரை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய போது , மத்திய அரசு தமிழகத்தில் கொண்டுவர விரும்பும் 8 வழி சாலை திட்டம், மக்களால் ஏற்க படுகிறதா என்பதை கேட்டு அதன் பின்னரே அமல்படுத்த வேண்டும். இதை விடுத்து மக்களிடத்தில், அவர்களுக்கு விருப்பமே இல்லாமல் 8 வழி சாலை திட்டத்தை திணிக்க முயற்சிக்கக்கூடாது.

Advertisment

vck

8 வழி சாலை திட்டத்தை ஒட்டுமொத்த தமிழகமே எதிர்க்கின்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்பது எனது விருப்பம் என்று தெரிவித்தார். இதே போல் எட்டு வழி சாலை திட்டம் அறிவிக்கப்பட்ட நாள் முதல், பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ்ஸும் இந்த திட்டத்தை எதிர்த்து வந்தார். இந்த இரண்டு கட்சிகளும் மக்களுக்கு எதிரான திட்டத்தில் ஒரே நிலையில் இருப்பது நல்ல விஷயம் என்று அரசியல் வட்டாரங்களும், பொது மக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.