Advertisment

பெரியப்பாவின் மடியில் உட்கார ஆசைபட்டயேமா... கண்ணீர் விட்டு அழுத தொல்.திருமாவளவன்... மனதை உருக்கிய சம்பவம்!

தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27, 30 என 2 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது.நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி மற்றும் மூன்றாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டது. இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் ஊமச்சிகுளம் அருகே உள்ள எருக்கலைநத்தம் கிராமத்தில் கார்வண்ணன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் எழிலரசி. இவர் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தென்னமரத்து சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற பின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.

Advertisment

vck

Advertisment

இதனையடுத்து திருமாவளவன் மதுரையில் இருப்பதை அறிந்துகொண்டபின் கார்வண்ணன் தன் குடும்பத்தினருடன் அவரை காண்பதற்கு சென்றுள்ளார். அப்போது செல்லும் வழியிலேயே எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் 3 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. தன்னை பார்க்க வந்து விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்து உடனடியாக மருத்துவமனைக்கு திருமாவளவன் சென்றார். இந்த நிகழ்வு குறித்து தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

vck

அதில், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் என்னை பார்க்க வேண்டுமென்று அவர்கள் வந்து கொண்டிருந்தபோதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. யாழினியின் மண்டையோட்டின் வெளியே எந்த காயமும் இல்லை. ஆனால் உள்ளே மூளை பழமையான சேதமடைந்துள்ளது. துளி அசைவுமின்றி ஆக்சிஜன் கருவி பொருத்தப்பட்டு மூச்சு விடுவதற்கு மிகுந்த சிரமப்பட்டார். அவரை எப்படி இருந்தாலும் காப்பாற்ற இயலாது என்று மருத்துவர்கள் கூறிய போது என் இதயம் வெடித்தது. பெரியப்பாவின் மடியில் அமர்ந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்று யாழினி விரும்பியதாக கேட்டறிந்த போது மனது இறுக்கமானது. பெரிய பெண்ணாக வளர்ந்து பெரியப்பாவுக்கு பாடிகார்டாக செயல்படுவேன் என்று கூறிய அந்த பிஞ்சு குழந்தையின் உயிரிழப்பானது என்னை பெரிய அளவில் பாதித்துள்ளது. என்னுடைய கண்ணீர் பூக்களால் அந்த பிஞ்சு குழந்தைக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

incident Leader report thol.thirumavalavan vck
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe