Advertisment

சாதி வெறியர்களின் கொட்டம் ஓய்ந்தபாடில்லை... ஊராட்சி மன்றத் தலைவர் சம்பவம் குறித்து தொல்.திருமாவளவன் கருத்து!

vck

Advertisment

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் உள்ளது அரியாகுஞ்சூர் ஊராட்சி. பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊராட்சி அது. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அரியாகுஞ்சூர் ஊராட்சித் தலைவராக பழங்குடி இருளர் சமூகத்தைச் சார்ந்த முருகேசன் என்பவர் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் பஞ்சாத்து ராஜ் சட்டப்படி இட ஒதுக்கீட்டுடன் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் தேர்வு செய்யப்படுகிற பட்டியலின மற்றும் பழங்குடியின ஊராட்சித் தலைவர்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. பல இடங்களில் பட்டியலின மற்றும் பழங்குடியின ஊராட்சி தலைவர்கள் மீது மிகக் கொடூரமான தீண்டாமை கொடுமைகள் ஏவிவிடப்படுகின்றன. இதுமட்டுமில்லாமல் ஊராட்சித் தலைவரை சவக்குழி தோண்ட வைத்து வன்கொடுமை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்திய நிலப்பரப்பில் இத்தகைய கொடுமை எங்குமே நிகழ்த்தப்பட்டிருக்காது. இக்கொடுமை தமிழகத்திற்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் வி.சி.க கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், செங்கம்-அரியாக்குஞ்சூர் ஊராட்சிமன்றத் தலைவர் முருகேசன் அவர்களைச் (இருளர்) சவக்குழி தோண்டவைத்து அவமதித்துள்ளனர். சாதிவெறிப் பித்தர்கள். தமிழக அரசு, தொடர்புடைய சாதிவெறியர்களை உடனே வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறைப்படுத்த வேண்டும். இங்கே கரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆனாலும், சாதி-மதவெறி கும்பலின் கொட்டம் ஓய்ந்தபாடில்லை என்றும் கூறியுள்ளார்.

Speech politics Thirumavalavan vck
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe