Advertisment

"குடிமக்கள் குரங்காட்டம் ஆடணுமா"... பிரதமர் உரை குறித்து திருமாவளவன் ஆவேச கருத்து !

இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்தும் வரும் நிலையில் வீடியோ மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,"ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கும்நன்றி.அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகளவில் முன்னுதாரணமாகி இருக்கிறது என்றும், ஏப்ரல் 5- ஆம் தேதி ஞாயிறன்று இரவு 09.00 மணி முதல் 09.00 நிமிடங்கள் மின் விளக்குகளை அணையுங்கள்; பல்ப்புகளை அணைத்து விட்டு வீட்டில் 9 நிமிடங்கள் மெழுகுவர்த்தி, அகல் விளக்குகளை ஏற்றுங்கள்; டார்ச் லைட் அல்லது செல்போன் மூலமாகவும் 9 நிமிடங்கள் ஒளியேற்ற வேண்டும்.9 நிமிடங்கள் விளக்கு ஏற்ற வேண்டும் என்றும் கூறினார். இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் பலரும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

vck

இந்த நிலையில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி கூறும் போது, 'பிரதமர் உரை பெருத்த ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.கரோனா எதிர்ப்பில் ஒற்றுமையைக் காட்டுவதற்காக ஒருமுறை ' கைதட்ட' சொன்னதே போதுமானது. அதுவே வேடிக்கை விளையாட்டாக அமைந்தது.மீண்டும் இது கேலிக்கூத்தாக உள்ளது.கரோனாவின் பெயரால் குடிமக்களைக் குட்டிக்கரணம் போடச்சொல்லி 'குரங்காட்டம்' நடத்துகிறார் ' எனக்கூறியுள்ளார்.

Advertisment
modi politics Speech thol.thirumavalavan vck
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe