தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27, 30 என 2 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது.நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி மற்றும் மூன்றாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டது. தேர்தல் நடந்த 27 மாவட்டங்களில் மொத்தம் உள்ள 515 இடங்களில் 272 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் ஒன்றிய கவுன்சிலரில் திமுக கூட்டணி 2356 இடங்களையும், அதிமுக கூட்டணி 2136 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

Advertisment

vck

vck

இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்தில் சன்னாசிநல்லூர், அயன்தத்தனூர் ஆகிய கிராம ஊராட்சிகளை கொண்ட இந்த ஒன்றியக்குழுவில் ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் தம்பி செங்குட்டுவனின் மனைவி செல்வி குலையுடன் கூடிய தென்னை மரம் சின்னத்தில் போட்டியிட்டு அவரை எதிர்த்த அதிமுக வேட்பாளரை விட செல்வி 1362 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.