Advertisment

கோயிலுக்குள் நுழைந்து சாமி கும்பிட்ட சிறுவன் தலையில் சுட்டுக்கொலை... உ.பி.யில் நடந்த சம்பவம் குறித்து தொல்.திருமாவளவன் கருத்து! 

vck

Advertisment

தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுத்தேர்வை ரத்து செய்யகோரிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. வழக்கானது ஜூன் 11ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தெலுங்கானாவில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளித் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு 'கிரேடு' வழங்கவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் வி.சி.க. கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், கடந்த சூன் 03-அன்றே சொன்னோம். 10ஆம் வகுப்புத் தேர்வு வேண்டாம்; அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும். தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தோம். அதுஎப்படி? என ஏளனம் செய்தனர். தெலங்கானா முதல்வரால் மட்டும் எப்படி முடிந்தது? வறட்டுப்பிடிவாதம் தவிர்த்து துணிந்து முடிவெடுக்கவும் என்றும் கூறியுள்ளார்.

Advertisment

அதேபோல் உ.பி.யில் சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்தும் கருத்து கூறியுள்ளார். அதில், உ.பி.யில் தான் இந்தக் கேவலம். தலித் சிறுவன் கோயிலுக்குள் நுழைந்து சாமி கும்பிட்டானாம். அதற்காக அவன் தலையில் சுட்டுப் படுகொலை. சாதிப் பித்துப்பிடித்த கும்பல் செய்த கொடூரம். ஆட்சிபீடத்தில் துறவிகள். துறவுக் கோலத்தில் சனாதன ஃபாசிசம் என்று கூறியுள்ளார். மேலும்,பல பிரச்சினைகளில் சிறுத்தைகளே முன்னத்தி ஏராக இருந்து தமிழக அரசியலை வழிநடத்தி இருக்கிறது. இன்று 75நாள் முழுஅடைப்புக்குப் பின்னர் பொதுமுடக்கத்தை முறித்துப்போட்டது சிறுத்தைகளின் அறப்போர். ஓ.பி.சி. மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி மையத் தொகுப்பில் ஒதுக்கீடுகோரும் உரிமைப்போர் என்று குறிப்பிட்டுள்ளார்.

incident Speech thol.thirumavalavan vck
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe