Advertisment

ஊர்ப்பெயர் தமிழில் எழுதுவது குறித்து அதிமுகவை பாராட்டிய தொல்.திருமாவளவன்!

vck

Advertisment

தமிழகத்தில் இருக்கும் பல மாவட்டங்கள் மற்றும் ஊர்களின் பெயர் தமிழ் மொழியில் இருந்தாலும் ஆங்கிலத்தில் அதன் பெயர்களைக் குறிப்பிடும் போது சரியான தமிழ் உச்சரிப்பிற்கு நேர்மாறாக உள்ளது. இதனையடுத்து தமிழில் அதன் ஊர்ப் பெயர்களை உச்சரிப்பது போலவே ஆங்கிலத்திலும் அதன் பெயர்கள் மாற்றப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஊர்கள் மற்றும் மாவட்டங்களின் பெயரை இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பெயர் பலகைகளிலும் மாற்றப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வி.சி.க. கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், இது வரவேற்கத்தக்கது. தமிழக அரசுக்கு எமது பாராட்டுகள். நன்றி. ADAYAR (அடையார்) என எழுதுவதை இனியாவது ADAIYAARU(அடையாறு) எனவும் PALAR (பாலார்) என எழுதுவதை PAALAARU (பாலாறு) எனவும் எழுதட்டும். Portonovo என்பதை PARANGIPETTAI (பரங்கிப்பேட்டை) என்றே ஆங்கிலத்திலும் எழுதட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Speech admk Thirumavalavan vck
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe