Advertisment

“கார்ப்பரேட்டுகளுக்காகப் பதைக்கும் மோடி அரசுக்கு எளியோரைப்பற்றி ஏது கவலை...” அதிமுக மற்றும் பாஜகவை விமர்சித்த தொல்.திருமாவளவன்!

vck

Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மே-31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,45,380- லிருந்து 1,51,767 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெளி மாநிலங்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திடம் இ-பாஸ் மூலம் அனுமதி பெற்று சொந்த மாநிலங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், புலம்பெயர் தொழிலாளர்களின் அவலத்தை தன்விருப்பவழக்காகவிசாரிக்கிறது உச்சநீதிமன்றம். இதுகுறித்து மைய, மாநில அரசுகளிடம் அறிக்கை அளிக்குமாறு கேட்டுள்ளது. கார்ப்பரேட்டுகளுக்காகப் பதைக்கும் மோடி அரசுக்கு எளியோரைப்பற்றி ஏது கவலை?இதனை நீதிபதிகளும் உணர்ந்துள்ளனர் என்றும், புலம்பெயர் தொழிலாளர்களின் உழைப்பைச்சுரண்டிவிட்டு தற்போது அவர்களை தமிழக அரசு நடத்தும் முறை வெட்கக்கேடாக உள்ளது என்றும் உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட இந்தியாவைத் தவிர வேறெங்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் இப்படி கேவலமாக நடத்தப்படும் அநாகரிகம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

admk politics Speech vck
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe